Back to English Version

About Satthiyas Drugs

உலகின் தொன்மையான இனங்களில் முதன்மையான இனம் தமிழ் இனம், தமிழினத்தின் தமிழ்மொழி தொன்மையும், இலக்கண, இலக்கிய செறிவும் மாண்பும் சிறப்பு மிக்கதாகும். தமிழில் உள்ள இலக்கியங்களின் தன்மையும், வகைப்பாடும், எண்ணிக்கையும் வேறு எந்த தொன்மையான மொழிகளிலும் இல்லை என்பது தமிழரின் பெருமைக்குரிய உண்மையாகும். உலகினரால் போற்றப்படும் தமிழரின் பண்பாடு தமிழரின் பண்பாடு தமிழரின் வாழ்க்கை நெறி முறைகளின் அடிப்படையிலான தமிழர் மருத்துவமே இன்று "சித்த மருத்துவம்" என்று அறியப்படுகிறது.

அத்தகைய சித்தர் மருத்துவத்தை வாழ்க்கைப்பணியாக ஏற்றுக்கொண்ட மரபினரின் ஏழாவது மரபினரான பரமக்குடி வைத்தியர். ராம. குப்புசாமி அவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் சத்தியாஸ் டிரக்ஸ்

சித்தர் மருத்துவ முறையே பேணி வந்த மருத்துவர்கள் மருந்துகளையும் தாமே உற்பத்தி செய்துவந்தனர். சென்னை அடையாறு இந்திய மருதுவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிறுவனம் தோன்றிய 'இம்காப்ஸ்' மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய பின்பும் பட்டதாரி மருத்துவர்கள் உருவாகி வந்த பின்பும் மருந்து செய் நிறுவனங்கள் துவக்கப்பட்டன. அம்மருந்துகளை பயன்படுத்தி பண்ட்டூவம் (சிகிச்சை) புரியும் போக்கு உருவானது. சித்தர் மருத்துவர்களின் பணியில் இது ஒரு வளர்ச்சிக்கட்டமானது. பட்டதாரி மருதுவர்கள் மருத்துவப்பணி ஆற்றவும், மருந்துகளின் செய்முறையைக் கற்றுக்கொள்ளாதிருந்த மரபுமுறை மருத்துவமுறை நிலைப்பெற்றிருக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அக்கால சூழ்நிலையின் தேவைகேற்றவாறு பரமக்குடி வைத்தியர் ராம. குப்புசாமி R.I.M.P. அவர்கள் 1973 இல் 'சத்தியாஸ் டிரக்ஸ்' என்ற சித்தமருத்துவ செய்சாலையை துவக்கினார். அவருடைய புதல்வர்கள் V.R.K. ரிஷ்யசிருங்கர் அவர்களும் வை. கு. கோபாலன் அவர்களும் சத்தியாஸ் டிரக்ஸ் நிருவனத்தின் செயல்பாட்டில் பெரும் பங்காற்றி வந்தனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவப் பணி ஆற்றிவரும் தலைமுறையினராவார். 1976 இல் அவரது காலத்திற்குப் பின் சத்தியாஸ் டிரக்ஸ் சித்த மருந்து செய்சலையை அவரது துணைவியாரும், புதல்வர்களும் நிர்வாகித்து வந்தனர். 1992 இல் எட்டாவது தலைமுறையினராக வை. கு. கோபாலன் அவர்களும் மருந்துசெய் சலையை நிர்வகித்து வருகிறார். வைத்தியம். ராம. குப்புசாமி அவர்களின் புதல்வர் வை. கு. ரமசாமி B.I.M.,M.D அவர்கள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையில் மாவட்ட சித்த மருத்துவலுவலராக ஓய்வு பெற்ற பின் 2014 இல் சத்தியாஸ் டிரக்ஸ் பணிகளில் பங்கேற்றுள்ளார்.

சத்தியாஸ் டிரக்ஸ் மருந்துசெய் நிறுவனம் வைத்தியம். ராம. குப்புசாமி அவர்களின் மரபினரால் தனித்துவமாகக் கையாளப்பட்ட மருந்துகளின் பயன்களை அனைத்து மக்களும் துய்க்கவேண்டும் என்ற உயர்ந்த உன்னத நோக்கில் துவக்கப்பட்டதாகும். வணிகத்தை நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்பதும், சித்தர் மருத்துவத்தின் மாண்பை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கமே தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Business Enquiry

+91 9488248903

map04564 - 225601

enquiry@satthiyasdrugs.co.in

Contact for Consultation

 

Follow Us

Facebook

 

Twitter

 

map8/373, Nagaiya Vydhiar Street, Paramakudi - 623707